17 வயது இளம் ப்ரோகிராமர்

எங்கள் மகன் லாமின் முஹம்மது தற்சமயம் ப்ளஸ் டூ முடித்து விட்டு கல்லூரியில் சேர்ந்துள்ளான். சிறுதொழில் செய்பவர்களுக்கு உதவும் விதமாக ஒரு அருமையான சாஃப்ட்வேரை தனி மனிதனால நான்கு மாத உழைப்பில் உருவாக்கி உள்ளான்.

அவனுக்கு அப்போ ஒன்னே முக்கால் வயது. ஒரு நாள் கம்ப்யூட்டரில் டெஸ்க்டாப் வால்பேப்பர் மாற்றப்பட்டிருந்தது. யார் மாற்றியது என்று எனக்குப் புரியவில்லை. கடைசியாக, சரியாக பேச்சு கூட வராத என் மகனைக் கேட்டால், அநாயசமாக மாற்றிக் காண்பிக்கிறான். பெரிய மனிதன் போல, மவுஸைக் கையாளுவதைப் பார்த்து எனக்கு ஒரே ஆச்சரியம்.

ரெண்டேகால் வயதில் பவர்பாயிண்ட் பேசிக்ஸ் ஓரிரு நாட்களில் கற்றுக் கொண்டான். நான் சிஸ்டமில் உட்காரும் போது, அவன் என் மடியில் அமர்ந்து எல்லாவற்றையும் பார்த்து பார்த்து பழகி விட்டான் என்று புரிந்தது. பேசக் கூட சரியாக பழகாத, ரெண்டேகால் வயதில், விண்டோஸ் ஆபரேடிங் சிஸ்டம் முழுவதையும் லாவகமாக கையாளுவது கண்டு எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள்.

அவனுக்கு ரெண்டு வயது இருக்கும் போது அவனுடைய கணினி திறமையை பல பத்திரிக்கைகள் புகைப்படத்துடன் வெளியிட்டன. அதைப் பார்த்து விட்டு அவனுக்கு ஈரோடு ஹிந்து கல்வி நிலையத்தில் ஸ்காலர்ஷிப் கொடுத்தார்கள். எல்கேஜி மற்றும் யூகேஜி கல்வி கட்டணம் இல்லாமல் இலவசமாகப் படித்தான். L.K.G. லீவில் MS Office கேர்ஸ் MICE ல் முடித்தான். U.K.G. லீவில், E-Office கோர்ஸ், Aptechல் படித்தான்.

அவன் படித்த பள்ளியில் அவனுடைய திறமைகளை இனம் கண்டு குழந்தைகள் தினம் அன்று அவனுக்கு குழந்தை மேதைக்கான விருது கொடுத்து கவுரவித்தார்கள். அதன் பின்னர் அவனுடைய குழந்தைமை பாதிக்கக் கூடாதென்று கணினி துறையில் மேற்கொண்டு கற்றலுக்கு வற்புறுத்தாமல் அவனை அவன் போக்கிலேயே விட்டு விட்டோம். அவனுடைய திறமை குறித்து பத்திரிக்கைகளில் வெளிவந்ததைக் கீழே காணலாம்.

1-15 அக்டோபர் 2006 சுட்டி விகடனில் வந்தது.
6/9/2006 தேதியிட்ட, தினமலரில் வெளிவந்தது.
22/7/2006 தேதியிட்ட தினதந்தி இளைஞர் மலரில் வெளியானது
5/9/2006 ல் THE HINDU வில் வெளியான கட்டுரையின் புகைப்படம்

தற்சமயம் அவனுக்கு 18 வயதாகிறது. அவனுடைய பதினேழாவது வயதில் ப்ளஸ் டூ ஆன்லைன் க்ளாஸ் படித்தபடியே வாட்ஸ் ஆப் ஆர்டரிங் சிஸ்டம் என்ற ஒரு சாப்ட்வேரை உருவாக்கத் தொடங்கி நான்கு மாத உழைப்பில் தனியொரு சிறுவனாக அதை வெற்றிகரமாக முடித்து லான்ச் செய்திருக்கிறான். இதற்காக அவன் காசு கொடுத்த எந்த கோர்ஸும் படிக்கவில்லை. யாரும் அவனுக்கு வழிகாட்டவும் இல்லை. கூகிள் வழி சுயகற்றல் மூலம் இதை சாத்தியப்படுத்தி இருக்கிறான். அவனுடைய கம்பெனியில் இணையதளம்: https://www.infomin.solutions

அவன் உருவாக்கிய இந்த சாஃப்ட்வேரின் இணையதளம் https://www.orderbywhatsapp.com