பொதுவாக மாதம் ஒரு முறை நடத்துவோம். ஒர்க்ஷாப் தேதிக்கு 10-20 நாட்கள் முன்பாக இன்ஸ்டாகிராம் ஸ்டோரி, வாட்ஸ் ஆப் குரூப் மற்றும் இந்த இணையதளத்தில் அறிவிப்பு செய்வோம். அடுத்த வகுப்பை மிஸ் பண்ணக் கூடாதென்று நினைத்தால் 94885 69934 வாட்ஸ் ஆப்பில் பிங் செய்து குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்.
எல்லா ஒர்க்ஷாப்பும் லைவ் ஆக நடக்குமா ?
ஆம் எல்லா ஒர்க்ஷாப்பும் லைவ் டெலிகாஸ்ட் அல்லது ஜூம் வழியாக நடக்கும். அதில் ப்ரீ ரெக்கார்டட் கண்டண்ட்ஸும் இருக்கும்.
எப்படி ஒர்க்ஷாப்புக்கு ரெஜிஸ்டர் செய்வது ?
தேதி அறிவிக்கப்பட்ட உடன் இந்த லின்க்கில் ஒர்க்ஷாப் பற்றிய முழு விவரங்கள் பார்க்கலாம். மற்றும் கட்டண விவரங்கள் இங்கே உள்ளது. பணம் செலுத்தி விட்டு ரசீதை +91 94885 69934 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பின்னர் ஒரு ஃபார்ம் அனுப்புவோம். அதில் பெயர், ஊர், வாட்ஸ் ஆப் எண், என்ன ஒர்க்ஷாப் போன்ற விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். அவ்வளவு தான், நீங்கள் ரெஜிஸ்டர் செய்து விட்டீர்கள்.
ஒர்க்ஷாப்புக்கான கட்டணம் எவ்வளவு ?
கட்டண விவரம் ஒவ்வொரு முறையும் மாறும். ரிஜிஸ்ட்ரேஷன் ஓப்பன் ஆன உடன், இந்த லின்க்கில் கட்டண விவரத்தைக் காணலாம்.
எப்படி பணம் செலுத்துவது ?
upi, gpay or imps, neft bank transfers with credit and debit cards மூலமாக பணம் செலுத்தலாம்.
ஒர்க்ஷாப்பில் கலந்து கொள்வது
எப்படி ஒர்க்ஷாப்பில் கலந்து கொள்வது ?
ஒர்க்ஷாப் லைவ் டெலிகாஸ்ட் மற்றும் ஜூம் வழியாக நடக்கும். ஜூம் ஆப்பை அப்டேட்டட் ஆக வைத்துக் கொள்ள வேண்டும். ஜூம் ஆப் இல்லாதவர்கள் ப்ளே ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம். – Click to Download
மொபைல் வழியாக ஒர்க்ஷாப் அட்டெண்ட் செய்யலாமா ?
தாராளமாக மொபைல் வழியாக அட்டெண்ட் செய்யலாம். ஆண்டிராய்டு, ஐபோன், லேப்டாப், டெஸ்க்டாப், டேப்லெட் வழியாகவும் அட்டெண்ட் செய்யலாம்.
எப்படி மீட்டிங் லின்க் கிடைக்கும் ?
வாட்ஸ் ஆப் ப்ராட்கேஸ்ட் வழியாக வகுப்பு துவங்குவதற்கு 5 நிமிடங்கள் முன்பாக மீட்டிங் லின்க் மற்றும் OTP அனுப்புவோம். அந்த லின்க்கில் அந்த OTP ஐ கொடுத்து ஒர்க்ஷாப்பில் இணைந்து கொள்ளலாம்.
ஏன் எனக்கு வாட்ஸ் ஆப் வழியாக மீட்டிங் லின்க் வரவில்லை ?
நாங்கள் ப்ராட்கேஸ்ட் வழியாக தான் மீட்டிங் லின்க் அனுப்புவோம். 94885 69934 என்ற எண்ணை உங்கள் வாட்ஸ் ஆப் இருக்கும் மொபைலில் சேவ் செய்தால் மட்டுமே ப்ராட்கேஸ்ட் உங்களுக்கு வரும். சேவ் செய்யாவிட்டால் வராது. சேவ் செய்ய வேண்டியது உங்கள் பொறுப்பு.
எப்போது மீட்டிங் லின்க் கிடைக்கும் ?
வகுப்பு தொடங்கும் நேரத்துக்கு 5 நிமிடங்கள் முன்பாக லின்க் அனுப்புவோம். இவ்வாறு ஒவ்வொரு நாளும் புதுப்புது லின்க் அனுப்பப்படும்.
இன்னொரு குடும்ப உறுப்பினர் ஒரே கணக்கில் அட்டெண்ட் செய்ய முடியுமா ?
ஒரு இடத்தில் இருந்து மட்டுமே ஒரு நேரத்தில் லாகின் செய்ய இயலும். இன்னொரு இடத்தில் இருந்து லாகின் செய்தால் முதலில் லாகின் செய்தவருக்கு லாக் அவுட் ஆகி விடும்.
வகுப்பு நடக்கும் போது குறிப்பு எடுத்துக் கொள்ள வேண்டுமா ?
கார்டனிங் வகுப்புக்கு ஹேண்ட்புக்கும் மற்ற வகுப்புகளுக்கு நோட்ஸுடன் கூடிய கோர்ஸ் மெட்டீரியலும் வகுப்பு முடிந்த பின் வழங்கப்படும். குறிப்புகள் ஆங்கிலத்தில் இருக்கும். ஆங்கிலம் வாசிக்கத் தெரியாதவர்கள் தம் தாய்மொழியில் நோட்ஸ் எடுத்துக் கொள்ள வேண்டும்.
என் சந்தேகங்களுக்கு விடை கிடைக்குமா ?
எல்லா வகுப்புகளுக்கும் இறுதி நாளில் கேள்வி பதில் நேரம் உண்டு. அப்போது உங்கள் சந்தேகங்களை நேரடியாக ஜூம் மூலம் கேட்டு தெளிவு பெறலாம். அல்லது அடுத்த ஒரு வாரம் வாட்ஸ் ஆப்பில் டெக்ஸ்ட் அல்ல்து வாய்ஸ் மெசேஜ் மூலமும் சந்தேகம் கேட்கலாம்.
ஹேண்ட்புக் & கோர்ஸ் மெட்டீரியல்ஸ்
ஹேண்ட்புக் என்றால் என்ன ?
ஹேண்ட்புக் கார்டனிங் ஒர்க்ஷாப்புக்கு மட்டும் வழங்கப்படுகிறது. அது வகுப்பில் கற்றுக் கொடுத்தவை பற்றிய சிறு குறிப்புகள் அடங்கிய கையேடு. எதிர்காலத்தில் கற்றுக் கொண்டவற்றை ரெஃபரன்ஸ் செய்வதற்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.
ஹேண்ட்புக்கின் ப்ரிண்டட் காப்பி தருவீர்களா ?
தர மாட்டோம். இது ஒரு ஈ-புக் ஆகும். ஹேண்ட்புக் என்றால் கையில் தரும் புக் என்று பொருளல்ல. சிறு குறிப்புகள் அடங்கிய கையேடு என்பதையே ஹேண்ட்புக் என்கிறோம்.
எப்போது ஹேண்ட்புக் தருவீர்கள் ?
வகுப்பு முடிந்ததில் இருந்து அடுத்த 48 மணி நேரத்துக்குள் வாட்ஸ் ஆப் வழியாக ஹேண்ட்புக் அனுப்புவோம்.
ஒர்க்ஷாப் துவங்கும் முன்பே இந்த புத்தகத்தைப் பெற இயலுமா ?
வகுப்பு முடிந்த பின் எல்லாருக்கும் அனுப்பும் போது தான் உங்களுக்கும் கிடைக்கும்.
கோர்ஸ் மெட்டீரியல் என்றால் என்ன ?
சோஷியல் மீடியா ஒர்க்ஷாப்களுக்கு பிரைவேட் பக்கங்களுக்கு அக்சஸ் கொடுப்போம். அங்கே வருங்காலப் பயன்பாட்டுக்காக வகுப்பில் கற்பித்தவை குறித்த சிறு குறிப்புகளும் சில வீடியோக்களும் இருக்கும். அது தான் கோர்ஸ் மெட்டீரியல்.
எப்பொழுது கோர்ஸ் மெட்டீரியல் அனுப்புவீர்கள் ?
வகுப்பு முடிந்ததில் இருந்து அடுத்த 48 மணி நேரத்துக்குள் கோர்ஸ் மெட்டீரியல் அனுப்பப்படும்.
பணம் செலுத்திய பின் கலந்து கொள்ள முடியாமை
பணம் செலுத்தி விட்டேன். கலந்து கொள்ள இயலவில்லை. என்ன செய்வது ?
எங்களை வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்டு உங்களுடைய வகுப்பை மாற்றி அமைக்கக் கோரலாம். அதன் விவரங்கள் கீழே கொடுத்துள்ளோம்.
சில சமயம் ஆஃபர் தருவோம். ஆஃபர் வகுப்பை மாற்றியமைக்கக் கோரும் பட்சத்தில் வகுப்புக்கான மீதித் தொகையை செலுத்த வேண்டி இருக்கும்.
சொந்தக் காரணங்களுக்காகக் கலந்து கொள்ள முடியாமல் போனால் ரீஃபண்ட் கிடைக்குமா ?
செலுத்திய தொகை திருப்பித் தரப்பட மாட்டாது எனினும் அடுத்த வகுப்பில் கலந்து கொள்ளும்படி தங்கள் தேதியை மாற்றிக் கொள்ளலாம்.
என்னால் ஒர்க்ஷாப்பில் கலந்து கொள்ள இயலாது. ரெக்கார்டட் க்ளாஸ் கிடைக்குமா ?
மன்னிக்கவும், நாங்கள் ரெக்கார்டட் க்ளாஸ் தருவதில்லை. நீங்கள் கலந்து கொண்டால் தான் கற்றுக் கொள்ள இயலும்.
என்னால் ஒர்க்ஷாப்பில் கலந்து கொள்ள இயலவில்லை. ஹேண்ட்புக் மட்டும் பெற்றுக் கொள்ளலாமா ?
எல்லாருக்கும் ஹேண்ட்புக் அனுப்பும் போது நீங்களும் பெற்றுக் கொள்ளலாம். எனினும் அதன் விளக்கத்தை வாட்ஸ் ஆப் வழியாக சொல்லித் தர இயலாது. அடுத்த வகுப்பில் கலந்து தான் கற்றுக் கொள்ள வேண்டும்.
என்னுடைய நெட் ஒர்க் இஷ்யூ அல்லது தாமதமாக வந்த காரணமாக வகுப்பை முழுவதுமாக அட்டெண்ட் செய்ய இயலவில்லை, என்ன செய்வது ?
நல்ல நெக் ஒர்க் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டியதும் சரியான நேரத்தில் வருவதும் உங்கள் பொறுப்பு. மன்னிக்கவும் உங்களுடைய தவறுக்கு நாங்கள் பொறுப்பேற்க இயலாது என்பதால் அந்த வகுப்பை ரீஷெட்யூல் செய்து தர இயலாது.
ஒர்க்ஷாப்பில் கலந்து கொள்ள எவ்வளவு டேட்டா தேவை ?
2 மணி நேர ஒர்க்ஷாப் என்றால் 3 அல்லது 4 ஜிபி நெட் இருப்பதைப் போலப் பார்த்துக் கொள்ளுங்கள்.
வகுப்பை மாற்றி அமைப்பது
என்னால் ஒர்க்ஷாப்பில் கலந்து கொள்ள இயலவில்லை. எப்படி வகுப்பை மாற்றி அமைப்பது ?
ரெகுலர் மாலை வகுப்பு மாணவர்களுக்கு
வகுப்பு துவங்குவதற்கு குறைந்த பட்சம் 4 மணி நேரங்கள் முன்பாக எங்களுக்கு வாட்ஸ் ஆப்பில் தகவல் தந்தால் அடுத்த நாள் அல்லது அடுத்த பேட்ச்க்கு மாற்றித் தருவோம்.
அடுத்த நாள் காலை 11 am to 1 pm நடக்கும் On Request காலை பேட்ச் மாணவர்களுடன் உங்களை இணைத்து விடுவோம். தவறிய வகுப்பை அட்டெண்ட் செய்து விட்டு அடுத்த மாலை வகுப்பை வழக்கம் போல அட்டெண்ட் செய்து கொள்ளலாம்.
ஒரு நாள் மாலை வகுப்பு தவறும் பட்சத்தில் மட்டுமே இவ்வாறு மாற்றித் தருவோம். தொடர்ந்து தவறினால் வெளியேறி விட்டு அடுத்த பேட்ச்சில் கலந்து கொள்ளலாம்.
ஒரு வேளை காலை வகுப்பை உங்களால் அட்டென் செய்ய முடியாது என்றால் வகுப்பில் இருந்து வெளியேறி விட்டு அடுத்த பேட்ச் மாணவர்களுடன் விட்ட இடத்தில் இருந்து இணைந்து கொள்ளலாம்.
கண்டிப்பாக ஒர்க்ஷாப் லின்க் அனுப்பிய பின் எந்த வித காரணத்துக்காகவும் ரீஷெட்யூல் செய்து தர இயலாது.
கேள்வி பதில் வகுப்பை ரீஷெட்யூல் செய்து தர இயலாது.
ஒரு வேளை அதில் கலந்து கொள்ள முடியாவிட்டால் உங்கள் சந்தேகங்களை வாட்ஸ் ஆப் வழியாகக் கேட்கலாம்.
On Request காலை வகுப்பு மாணவர்களுக்கு
வகுப்பை அட்டெண்ட் செய்ய இயலாத பட்சத்தில் குறைந்த பட்சம் 3 மணி நேரம் முன்பாக வாட்ஸ் ஆப் மூலம் தகவல் தந்தால் அடுத்த் பேட்ச்க்கு எந்த நாளில் விட்டீர்களோ அந்த நாளில் இருந்து அட்டெண்ட் செய்யுமாறு மாற்றித் தந்து விடுவோம்.
வகுப்புக்கான லின்க் அனுப்பிய பின் சொன்னால் கண்டிப்பாக மாற்றித் தர இயலாது.
கேள்வி பதில் வகுப்பை ரீஷெட்யூல் செய்து தர இயலாது.
ஒரு வேளை அதில் கலந்து கொள்ள முடியாவிட்டால் உங்கள் சந்தேகங்களை வாட்ஸ் ஆப் வழியாகக் கேட்கலாம்.
வெளிநாட்டுவாசிகளுக்கு
நான் வெளிநாட்டுவாசி. என்ன செய்வது ?
எந்த நாட்டில் இருந்தாலும் நீங்கள் ஒர்க்ஷாப்பில் கலந்து கொள்ளலாம். வகுப்புக்கான நேரம் இந்திய நேரம் ஆகும். உங்கள் நேரத்தை அதற்கேற்ப நீங்கள் அமைத்துக் கொள்ள வேண்டும்.
இந்தியாவுக்கு வெளியில் வசிக்கிறேன், எனக்கு கார்டனிங் வகுப்பு பயன்படுமா ?
நாங்கள் ஸ்ரீலங்கா, துபாய், யூஏஇ, கலிஃபோர்னியா, சவுதி அரேபியா, அமெரிக்கா உட்பட பல நாட்டு மக்கள் எமது ஒர்க்ஷாப்பில் கலந்து கொண்டு வெற்றிகரமாக செடி வளர்த்து வருகிறார்கள். எங்கே வசித்தாலும் செடி வளர்ப்புக்கான தேவைகள் ஒன்று தான் எனினும் தத்தமது சீதோஷ்ண நிலைக்கேற்ப சின்னச் சின்ன மாற்றங்கள் மட்டும் செய்து கொள்ள வேண்டும்.
இந்தியாவுக்கு வெளியில் வசித்தால் எப்படி பணம் செலுத்துவது ?
உங்கள் க்ரெடிட் அல்லது டெபிட் கார்டு பயன்படுத்தி பேப்பால் வழியாக பணம் செலுத்தலாம். எங்களை வாட்ஸ் ஆப் வழியாகத் தொடர்பு கொண்டு எமது பேப்பால் ஐடி பெற்றுக் கொள்ளலாம்.
என்னிடம் பேப்பால் ஐடி இல்லை என்ன செய்வது ?
பேப்பால் என்பது ஒரு பேமெண்ட் கேட்வே தான். ஒரு வேளை உங்களில் க்ரெடிட் அல்லது டெபிட் கார்டு இல்லாவிட்டால் ஐந்து நிமிடங்களில் உங்களுக்கென ஒரு பேப்பால் ஐடி க்ரியேட் செய்து கொள்ளலாம்.
Common Doubts
தாங்கள் எங்கே உள்ளீர்கள் ?
நாங்கள் தமிழகத்தில் உள்ள ஈரோட்டில் இருக்கிறோம்.
யார் எனக்குக் கற்றுக் கொடுப்பார் ?
ஆஸ்க் ஜான்சி Mrs. சுஹைனா மஜ்ஹர், M.A(eng)., M.Com., B.Ed., உங்களுக்குக் கற்றுக் கொடுப்பார். அவரைப் பற்றிய முழு விவரங்களை இங்கே காணலாம்
இது குழு வகுப்பா இல்லை தனி வகுப்பா ?
இது குழு வகுப்பு தான். தனி ஒருவருக்காக வகுப்பு நடத்த இயலாது.
உங்கள் நேரம் எனக்கு சரி வரவில்லை. நான் சொல்லும் நேரத்தில் எனக்கு நடத்துவீர்களா ?
ஆஃபர் இல்லாத ஒட்டு மொத்த ஒர்க்ஷாப் தொகையை இரு மடங்கு செலுத்தும் பட்சத்தில் உங்களுக்கான தனி நேரம் ஒதுக்கப்படும். எனினும் தொடர்ச்சியாக அடுத்தடுத்த நாட்கள் நடத்தி முடித்து விடுவோம். ஒவ்வொரு நாளும் கண்டிப்பாக அதே நேரத்தில் மட்டுமே நடத்துவோம். இந்த ஸ்பெஷல் வகுப்புக்கு கேள்வி பதில் நேரம் இருக்காது. எனினும் உங்கள் சந்தேகங்களை வாட்ஸ் ஆப் மூலம் கேட்டு தெளிவு பெறலாம்.
ஆஃப்லைன் ஒர்க்ஷாப் நடத்துகிறீர்களா ?
இல்லை ஆஃப்லைன் ஒர்க்ஷாப் நடத்துவதில்லை.
ஆஃபீஸ் வேலைகளினூடே இயர் ஃபோன் மட்டும் போட்டுக் கொண்டால் போதுமா ?
உங்கள் வேலையின் சூழல் அனுமதித்தால் அது போதும். எனினும் சில செயல்முறை விளக்கங்களுக்கு வீடியோவை கவனிக்க வேண்டி இருக்கும். முழு கவனமும் வீடியோவில் இருந்தால் மட்டுமே கற்றுக் கொள்ள இயலும்.
என் வீடியோவை ஆஃப் செய்து விடலாமா ?
நீங்கள் உங்கள் வீடியோவை ஆன் செய்யத் தேவையில்லை. கேள்வி பதில் நேரத்தில் மட்டும் ஆன் செய்து கேள்விகள் கேட்பது நல்லது.
அடுத்த ஒர்க்ஷாப்புக்கு இப்போதே ப்ரீபுக்கிங் செய்ய இயலுமா ?
இயலாது புக்கிங் ஓப்பன் ஆன பின் தான் ரிஜிஸ்டர் செய்ய வேண்டும்.
எப்போது புக்கிங் க்ளோஸ் ஆகும் ?
எல்லாரையும் திருப்திப்படுத்தி எல்லாருடைய சந்தேகங்களையும் தீர்த்து வைக்க வேண்டும் என்பதால் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கும் மேல் சேர்ப்பதில்லை. அதனால் புக்கிங் ஃபுல் ஆகி விட்டால் க்ளோஸ் செய்து விடுவோம்.
ஒரு வகுப்புக்கு எத்தனை பேரை சேர்ப்பீர்கள் ?
ஒவ்வொரு முறையும் இது மாறுபடும் என்பதால் எத்தனை பேர் என்று சொல்ல இயலாது.
ஒர்க்ஷாப் முடிந்த பின் எவ்வளவு காலத்துக்கு சப்போர்ட் தருவீர்கள் ?
ஒர்க்ஷாப் முடிந்த கடைசி நாளில் இருந்து அடுத்த ஒரு வாரத்துக்கு வாட்ஸ் ஆப் வழி சப்போர்ட் தருவோம். வாட்ஸ் ஆப் வழியாக உங்கள் சந்தேகங்களை வாய்ஸ் மெசேஜ் அல்லது டெக்ஸ்ட் மெசேஜ் மூலம் கேட்கலாம். வேலை நாட்களில் அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் தருவோம்.
மேலே குறிப்பிட்டவை அல்லாமல் வேறு சந்தேகங்கள் உள்ளது என்ன செய்வது ?
94885 69934 என்ற எண்ணில் வாய்ஸ் மெசேஜ் அல்லது டெக்ஸ்ட் மெசேஜ் மூலம் உங்கள் சந்தேகங்களைக் கேட்கலாம். வேலை நாட்களில் அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் தருவோம்.