Free Promotion in Queen Jhansi Channel

Details About Free Product Promotion in Queen Jhansi YouTube Channel which has 1.75 Lakh + Subscribers

ஒன்னே முக்கால் லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்க்ரைபர்ஸ் கொண்ட எமது குயின் ஜான்சி யூட்யூப் சேனலில் தங்கள் பொருட்களை முற்றிலும் இலவசமாக ரிவ்யூ செய்து வீடியோ மூலம் ப்ரொமோட் செய்து தர தயாராக இருக்கிறோம். அதற்கான விதிமுறைகள்:

  1. கண்டிப்பாக இது சிறு தொழில்களுக்கு மட்டுமே. வளர்ந்த தொழில்களுக்கு அல்ல. குறிப்பாக வீட்டில் இருந்தே தொழில் செய்யும் பெண்களுக்கு சப்போர்ட் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் துவங்கப்பட்ட திட்டம் இது.
  2. இது பொருட்களுக்கு மட்டுமே. MLM, Apps, Services ஆகியவற்றை ப்ரொமோட் செய்ய இயலாது.
  3. புகைப்படத்தை அனுப்பினால் அதை வைத்து ரிவ்யூ செய்ய இயலாது. பொருட்களை அனுப்பி வைக்க வேண்டும்.
  4. கெமிக்கல்ஸ், சோப் மற்றும் க்ளீனிங் பொருட்களை நாங்களே தயாரிப்பதால் அத்தகைய பொருட்களுக்கு ரிவ்யூ செய்ய இயலாது.
  5. ஒருவருக்கு ஒரு முறை மட்டுமே இலவசமாக ரிவ்யூ செய்ய இயலும்.

உங்கள் பொருட்களை நான் ரிவ்யூ செய்ய….

  1. முதலில் என்னை இன்ஸ்டாகிராம் மூலம் அனுகி உங்கள் பொருட்கள் பற்றி சொல்லி தேவைப்பட்டால் புகைப்படம் அனுப்பி ஒப்புதல் பெற்றுக் கொள்ளுங்கள். இன்ஸ்டாகிராம் ஐடி @askjhansi ( https://www.instagram.com/askjhansi )(இன்ஸ்டாகிராம் இல்லாதவர்கள் கணக்கு துவங்கி விட்டு அனுகுங்கள்.)
  2. வாட்ஸ் ஆப் நான் பயன்படுத்துவதில்லை. தொலைபேசி எண்ணும் பகிர இயலாது. அதனால் தயவுசெய்து இன்ஸ்டாகிராம் மூலம் மட்டும் மெசேஜ் செய்யுங்கள்.
  3. ஒப்புதல் பெற்ற பின் உங்கள் பொருட்களை இந்த முகவரிக்கு அனுப்பி வைய்யுங்கள். : Mrs. Suhaina Mazhar, c/o Queensland International,1/4 AOK Nagar, B.P.Agraharam, Erode – 638005, Ph: 0424-2292575. ஒப்புதல் பெறாமல் தயவு செய்து பொருட்களை அனுப்ப வேண்டாம்.
  4. பொருட்களை அனுப்பும் போது அனுப்பி உள்ள பொருட்களின் விலை விவரம், அதை பயன்படுத்தும் முறை, எப்படி ஆர்டர் செய்வது, உங்களை மக்கள் அனுக வேண்டிய தொலைபேசி / வாட்ஸ் ஆப் எண், முகவரி, வேறு என்ன பொருட்கள் விற்பனை செய்கிறீர்கள், உங்கள் இன்ஸ்டாகிராம் ஐடி ஆகிய விவரங்களை ஒரு தாளில் எழுதி பார்சல் உள்ளேயே வைத்து அனுப்புங்கள்.
  5. இரண்டு மூன்று தொலைபேசி எண்கள் இருந்தால் வீடியோவில் கொடுப்பதற்கு முக்கியமான ஒரு தொலைபேசி எண் மட்டும் தனியாகக் குறிப்பிட்டு அனுப்புங்கள்.
  6. இதை ஒரு சேவையாக செய்ய நினைப்பதால் நீங்கள் அனுப்பும் பொருட்களின் மதிப்பு பற்றி எங்களுக்கு பிரச்சினை இல்லை. ஒரு ருபாய் மதிப்பிலான பொருட்களுக்கும் நாங்கள் ரிவ்யூ செய்வோம். ஆனால் அனுப்பிய பொருட்களைத் திருப்பி அனுப்ப இயலாது.
  7. தனி வீடியோவாகவோ அல்லது இரண்டு மூன்று பொருட்களை இணைத்து ஒரே வீடியோவாகவோ அல்லது எமது விலாகின் இடையிலோ ரிவ்யூ செய்வோம்.
  8. ஹிஜாப், ட்ரஸ் மெட்டீரியல்ஸ் போன்றவை என்றால் இன்ஸ்டாகிராம் மெசேஜ் மூலம் புகைப்படம் மற்றும் விவரங்கள் அனுப்பி ஒப்புதல் பெற்ற பின் அனுப்புங்கள்.
  9. கெட்டுப் போகக் கூடிய உணவுப் பொருட்கள் என்றால் வீடியோ ஷூட் செய்து வைத்து விட்டு பின்னர் முதலில் அனுப்பியவர்களுக்கு முதலில் என்றவாறு வரிசையாக வெளியிடுவோம்.
  10. பொருட்கள் நிறைய இருக்கும் பட்சத்தில் நீங்கள் அனுப்பி இருக்கும் பொருட்களை ப்ரொமோ செய்ய ஒரு மாதம் முதல் இரண்டு மாதங்கள் வரை கூட ஆகலாம். தயவுசெய்து காத்திருங்கள்.

கீழ்கண்ட சவுகரியங்கள் வேண்டுமென்றால் நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும். அது குறித்த விவரங்களை இன்ஸ்டாகிராம் மெசேஜ் மூலம் கேட்டு அறியலாம்.

  1. முதலில் அனுப்பியவருக்கு முதலில் என்ற விதத்தில் பொருட்களை ரிவ்யூ செய்வோம். இவ்விதத்தில் உங்கள் பொருட்களை ப்ரொமோ செய்ய ஒரு மாதம் முதல் இரண்டு மாதங்கள் வரை ஆகலாம். உடனடியாக ஒரு வாரத்துக்குள் ரிவ்யூ செய்ய வேண்டும் என்றால் கட்டணம் செலுத்த வேண்டும்.
  2. ஃப்ரீ ப்ரொமோ குயின் ஜான்சி சேனலுக்கு மட்டுமே. எங்கள் முகநூல் பக்கமான ASK Jhansi அல்லது ASK Jhansi யூட்யூப் சேனலில் ப்ரொமோ செய்ய வேண்டும் என்றால் கட்டணம் செலுத்த வேண்டும்.
  3. ஏற்கனவே ஒரு முறை ஃப்ரீ ப்ரொமோ செய்த பின் மீண்டும் ஒரு முறை ப்ரொமோ செய்ய வேண்டும் என்றால் கட்டணம் செலுத்த வேண்டும்.

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top