மாடியிலொரு நந்தவனம் – 2
“என்ன சொல்றீங்க… எப்படியாவது இந்த சாதிமல்லிச் செடியை எடுக்காம இடிந்த காம்பவுண்டு கட்ட முடியாதா…?!” என்றேன் அதிர்ச்சியாய்… பற்றாக்குறை பட்ஜெட்டில் வீடு கட்டியது ஒரு புறம் என்றால் நான்கு பக்கமும் காம்பவுண்டு எழுப்ப வேண்டிய கட்டாயம் இன்னொரு புறம்…. அதனால் ஹாலோப்ளாக் கல்லுல கட்டி பூசாமல் விட்டு விட்டோம். அது எட்டு வருஷம் தாங்கியது. ஒரு நாள் மழைல இடிந்து விழுந்து விட்டது. உடனடியா சுவர் எழுப்பி ஆக வேண்டிய கட்டாயம். ரெடிமேட் காம்பவுண்ட் சுவர் போடுபவரை …